மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட்டக்களப்பு பாரம்பரிய லயன் கழகம் மனிதநேய அடிப்படையில் இலங்கை அபேக்சா நிறுவனத்தால் பல கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த பொருட்களை இனாமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30) வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் அபேக்சா நிறுவனத்தின் தலைவர் லயன் கே குமார், லயன் கழக தலைவர் லயன் ஜி மோகன்ராஜ் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தலைமை தாங்கியதோடு புற்றுநோய் வைத்திய பிரிவின் பொறுப்பாளரும் வைத்திய ஆலோசகருமான வைத்தியர் ஏ.இக்பால் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பணிப்பாளர் ஆர் முரளீஸ்வரன் உரை நிகழ்த்தும்போது,
ஒரு வைத்தியசாலை தன்னிடம் வரும் நோயாளர்களை மனித நேயத்தோடும் கௌரவத்தோடும் பரிபாலிக்க வேண்டும் என்பது ஒரு நியதி ஒரு தனியார் வைத்தியசாலையில் இந்த நியதி அபரிதமாக இருக்கின்றது யாரும் மறுப்பதற்கு இல்லை.
ஆனால் அரச வைத்தியசாலையில் அப்படி இருப்பதில்லையென மக்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனாலும் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையை பொறுத்தவரை கண்ணியமும் கௌரவமும் மனித நேயமும் நோயாளர்களுக்கு கிடைத்து வருகிறது என்பதை நினைக்கும் போது அதன் பணிப்பாளர் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன். இதிலும் விசேடமாக புற்றுநோய் பிரிவில் இது சிறப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் பிரிவின் பொறுப்பாளர் வைத்தியர் ஏ இக்பால் என்றால் அது மிகையில்லை.
வைத்தியசாலையின் தேவைகள் விதவிதமாக நிறைந்து இருக்கும் இதற்கு மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையும் விதிவிலக்கல்ல.
அரசாங்கம் ஒரு வைத்தியசாலையின் தேவைகள் அனைத்தையும் முற்று முழுதாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்க முடியாது அதற்கு வாய்ப்பும் இருக்காது.
அப்படி என்றால் இதை எப்படி நிறைவு செய்வது என்ற கேள்வி எழும்பத்தான் செய்யும். அதற்கு ஒரே ஒரு பதில் நன்கொடையாளர்கள்தான்.
இதன் அடிப்படையில் அபிக்சா நிறுவனம் மற்றும் லயன் கழகங்கள் இதர நன்கொடையாளர்கள் மனிதநேயத்தின் அடிப்படையில் தம்மால் இயன்றளவு நன்கொடைகளை அவ்வப்போது பொருளாக வழங்கி நமது போதனா வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் நன்றி மறப்பது நன்றன்று.
இப்படிப் பார்க்கும்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சராசரியான வைத்திய தேவைகளையும் வசதிகளையும் பெற்றிருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் தேவைகளும் வசதிகளும் இன்னமும் முற்றுப் பெறவில்லை. அபேக்சா நிறுவனம் அடுத்தடுத்த வருடங்களுக்கும் உதவிகளை வழங்க காத்திருப்பதாக அதன் தலைவர் கூறினார் அதனைக் கேட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவ் நிறுவனமும் அதன் தலைமையும் நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இப்போது எமக்கு கிடைத்திருக்கின்ற நன்கொடைகள் நாள குழாய்களை கண்டுபிடிக்கும் இயந்திரம், சிறுநீர் இழக்கி மருந்து வகைகள், தண்ணீரை சுத்தப்படுத்தி வடிகட்டி குடிநீருக்குப் பாவிக்கும் பொறிமுறை கொண்ட இயந்திரங்கள், சுவரில் மாட்டும் மின்விசிறிகள், சக்கர நாற்காலிகள்.
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் புற்றுநோய் வாட்டுகளில் இருக்கின்ற நோயாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சாயி சமித்தி நிறுவனம் பால் தேனீரும் சிற்றுண்டிகளும் வழங்கி வருகின்றன இந்த நிகழ்வு இன்றைக்கு நூறாவது நிகழ்வாகும். இதுவும் ஒரு சிறப்பு.
புற்றுநோய் பிரிவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட சாதிய உத்தியோகத்தர் தமது வைத்திய பிரிவுக்கு அன்பளிப்பு செய்த அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM