கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன் ஏஐயின் ஏஐ மொடல்: மேலுமொரு தொழில்நுட்ப நிறுவனம் பாதிப்பு!

Published By: Digital Desk 3

29 Jul, 2026 | 02:59 PM
image

ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கான கட்டுப்பாட்டுச் சூழலில் இருந்து தப்பித்து, மற்றுமொரு முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ஹக்கிங் பேஸ்' தளத்தை ஊடுருவிய ஏஐயின் ஏஐ மொடல், இரண்டாவது தொழில்நுட்ப நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவரையும் ஊடுருவியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவது தொடர்பான அச்சத்தை இச்சம்பவம் உலகளவில் மீண்டும் எழுப்பியுள்ளது.

ஓபன் ஏஐயின் இந்த 'ரோக் ஏஐ ஏஜென்ட்', தனக்குக் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சி இலக்குகளை எட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டபோது, தனது சோதனைக் கட்டுப்பாடுகளை மீறி திறந்த இணையத்தை அடைந்துள்ளது.

திருடப்பட்ட உள்நுழைவு விபரங்கள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹக்கிங் பேஸ் நிறுவனத்தின் சர்வர்களில் இது ஊடுருவியது.

ஹக்கிங் பேஸ் வெளியிட்ட காலவரிசையின்படி, இந்த ஏஐ மொடல் ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் சேவையகத்தில் தங்கித் தனது தாக்குதலைப் பரப்பியுள்ளது. அந்த மூன்றாம் தரப்பு நிறுவனம் நியூயோர்க்கைச் சேர்ந்த மொடல் லெப்ஸ் என்பது தெரியவந்துள்ளது.

மொடல் நிறுவனத்தின் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி அக்ஷத் புப்னா, "எங்கள் தளத்தில் இருந்த வாடிக்கையாளர் ஒருவரின் பலவீனமான குறியீட்டைப் பயன்படுத்தியே ஏஐ ஊடுருவியுள்ளது. எங்களது தளம் அல்லது பாதுகாப்பு அமைப்பு சமரசம் செய்யப்படவில்லை" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மொடல் வாடிக்கையாளர் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு நேரடியாகப் பதிலளிக்காத ஓபன் ஏஐ, இந்த ஏஐ ஏஜென்ட் 4 வெவ்வேறு சேவைகளில் உள்ள 4 கணக்குகளை ஊடுருவியுள்ளதாகப் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இந்த  ஏஐ மொடல் தற்போது முடக்கப்பட்டு, குறியாக்கம் செய்யப்பட்டு,  ஆராய்ச்சி அணுகலிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஹக்கிங் பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிளெமென்ட் டெலாங்கு, 

இதற்குப் பின்னால் ஒரு பெரிய ஆய்வுக்கூடம் இருப்பதை தாங்கள் சந்தேகித்ததாகவும், இதில் ஓபன் ஏஐக்கு எந்தவொரு தீய எண்ணமும் இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மனிதக் கட்டுப்பாட்டை மீறி, தாமாகவே சிந்தித்து இணையக் குற்றங்கள் மற்றும் ஊடுருவல்களில் ஈடுபடும் அதிநவீன ஏஐ மாதிரிகள் தொடர்பில் உலகளாவிய தொழில்நுட்ப நிபுணர்கள் தீவிர கவலை வெளியிட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக...

2026-09-01 15:16:48
news-image

Gemini Omni: கூகுளின் மல்டிமாடல் ஏஐ...

2026-08-29 14:07:18
news-image

ASUS இடமிருந்து AI-வலுவூட்டப்பட்ட பிரதான ExpertBook...

2026-08-13 15:49:36
news-image

கணினி, கையடக்கத் தொலைபேசிகளின் வேகத்தை அதிகரிக்கும்...

2026-08-11 11:17:38
news-image

கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன்...

2026-07-29 14:59:15
news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40