இன்றைய சூழலில் கைபேசி இல்லாத நபர்களை கூட அடையாளம் காண இயலும். ஆனால் கடன் வாங்காத ஒருவரையும் கூட எம்மால் எளிதாக கண்டறிய இயலாது. தொழிலாக இருந்தாலும்.. வர்த்தகமாக இருந்தாலும்.. கடன் என்பது தொடர்ந்து நீடிக்கக்கூடிய ஒரு அபாய சங்கிலி. இந்த சங்கிலியின் இயக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்... கடன் சுமையால் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியாக முன்னேற்றத்தில் பயணிப்பர்.
விவரிக்க இயலாத காரணங்களால் கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கினால்... அப்போதே விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கடனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இத்தகைய தருணத்தில் எதிர்பார்த்த பல இடங்களில் இருந்து நிதி உதவியோ மாற்றுக் கடன் உதவி கிடைக்காத நிலையில்... மனம் தடுமாறும். இத்தகைய தருணங்களில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகளை எம்முடைய முன்னோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள். அதனை பற்றினால் கடன் சுமையிலிருந்து விலக முடியும்.
இதற்கு தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய், ஏலக்காய்
இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டு, சனிக்கிழமைகளில் அல்லது தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்குள்ள கால பைரவரை வணங்கி, இதனை தானமாக வழங்கிட வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சுக்கிர ஓரை தருணத்தில் கடனை திரும்பி செலுத்துவதற்கான முதல் தவணைத் தொகையை கட்டினால்... விரைவில் கடன் தொகையை முழுவதுமாக கட்டி, கடன் சுமையிலிருந்து விடுபடுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM