பாலஸ்தீன அரசின் தூதுவர் மேன்மைதங்கிய இஹாப் ஐ. எம். கலீல் மற்றும் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து கொழும்பு டி லா சால் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ஆர். ஜே. ஜெயகாந்தன் மற்றும் கல்விசார் பணியாளர்களுடன் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது.
குறிப்பாக, கல்லூரியின் கல்விசார் செயற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாலஸ்தீன அரசின் தூதரகம் சார்பில், தூதுவர் மேன்மைதங்கிய இஹாப் ஐ. எம். கலீல் அவர்களால், கொழும்பு டி லா சால் கல்லூரியின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடையொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM