கொழும்பு செட்டியார் தெரு - பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் 152வது ஆடிவேல் வெள்ளி ரத பவனி இன்று

28 Jul, 2026 | 08:47 AM
image

"மேன்மைக்கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"

இலங்கையின் சைவ சமய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக திகழ்கிறது கொழும்பு செட்டியார் தெரு மற்றும் பம்பலபிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் வெள்ளி ரத பவனி. நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தையும், பக்தியையும், தமிழர் பண்பாட்டையும் தலைமுறை தலைமுறையாக சுமந்து வரும் இந்த மகத்தான விழா, இன்று இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமய விழாக்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு நடைபெறும் இந்த ஆண்டின் உற்சவ நிகழ்வுகள் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன.

2026ஆம் ஆண்டுக்கான ஆடிவேல் வெள்ளி ரத பவனியின் நிகழ்ச்சிகள்:

ஜூலை 27ஆம் திகதி மகேஸ்வர பூஜையுடன் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகின.

ஜூலை 28ஆம் திகதி காலை 7.00 மணிக்கு, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில், ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி வள்ளி தேவசேனை சமேதராக சர்வாபரண அலங்காரத்துடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி, சகல மங்கள வாத்தியங்களுடனும் புறப்பட்டு, செட்டியார் தெரு, மெயின் வீதி, சத்தாம் வீதி, ஜனாதிபதி மாளிகை, காலி வீதி, அலரி மாளிகை வழியாக பம்பலபிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைவார்.

ஜூலை 28 மற்றும் 29ஆம் திகதிகளில் காலை 10.30 மணி முதல் விசேட பூஜைகள் நடைபெற்று, கதிர்காமத்தில் அருள்பாலிக்கும் திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குவார்.

ஜூலை 29ஆம் திகதி மாலை, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தவில்-நாதஸ்வரக் கலைஞர் கலை வளர்மணி மதுரை எண். பாலு அவர்களின் இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு புதிய கதிரேசன் மண்டபத்தில் சொல்லின் செல்வர் ஸ்ரீ மணிகண்டன் அவர்களின் ஆன்மீக பேருரையும் நடைபெறும்.

ஜூலை 30ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு, தென்னிந்திய தொலைக்காட்சி புகழ் பாடகர்கள், பாடகிகள் மற்றும் இலங்கையின் முன்னணி இசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஜூலை 31ஆம் திகதி காலை 8.00 மணிக்கு, வெள்ளி ரதம் மீண்டும் பம்பலபிட்டி ஆலயத்திலிருந்து புறப்பட்டு, மதியம் காலிமுகத்திடலை வந்தடைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் செட்டியார் தெரு ஆலயத்தை வந்தடைந்து உற்சவம் இனிதே நிறைவடையும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய ஆன்மீக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செட்டியார் தெரு மற்றும் பம்பலபிட்டி ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் பிரதம அறங்காவலர் திரு. ராஜேந்திரன் செட்டியார் அவர்களின் தலைமையில், செட்டியார் தெரு ஆடிவேல் விழாக் குழுவினர் மற்றும் தொண்டர்களால்  மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த புனிதமான ஆடிவேல்  உற்சவத்தில் கலந்து கொண்டு, முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்று, குடும்ப நலன், ஆன்மிக அமைதி, வாழ்வின் வளம் ஆகியவற்றைப் பெற அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

வேல்! வேல்! வெற்றிவேல்! முருகன் திருவருள் உலகமெங்கும் பொழியட்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50