புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் சர்வதேச சகோதரிகள் தினத்தை ஒகஸட் மாதம் 9ஆம் திகதி கொண்டாடவுள்ளது.
இந்நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த பூண்டுலோயா விவேகானந்த மத்திய மகா வித்தியாலயத்தில் மகளிர் அணியின் தலைவி சிவகெளரி (சுடரி) தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வினில் பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்குதல், பெண்பிள்ளைகள் தங்கியிருக்கும் காப்பகங்களுக்கு உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் என்பன இடம்பெறவுள்ளன.
இதில் விசேடமாக நாடாளவிய ரீதியிலுள்ள மகளிர் அமைப்பைச் சார்ந்த அங்கத்தவர்களின் கவியரங்க நிகழ்வும் கலை,கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை நுவரேலியா மாவட்ட இணைப்பாளர் பிரபா செல்வநாதன் மேற்கொண்டு வருகிறார்.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 075-4880172 என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறியலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM