இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் மேற்குலக நாட்டினரை போல் தெற்காசிய நாடுகளிலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நியோ அட்ஜுவென்ட் தெரபி எனும் நவீன சிகிச்சை மூன்று வகைகளாக அறிமுகப்படுத்தப்பட்டு, பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மார்பக புற்றுநோய், பெருங்குடல், நுரையீரல்,புரோஸ்டேட், மல குடல் புற்றுநோய் என பத்துக்கும் மேற்பட்ட புற்று நோய்களுக்கு அத்துறை சார்ந்த வைத்திய நிபுணர்கள் புற்றுநோய் கட்டிகளின் அளவினை சத்திர சிகிச்சைக்கு ஏற்ற வகையில் சீரமைக்க நியோ அட்ஜுவென்ட் தெரபி எனப்படும் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள்.
நியோ அட்ஜுவென்ட் தெரபி என்பது சத்திர சிகிச்சைக்கு முன்பாக புற்றுநோய் கட்டிகளின் அளவுகளை சுருக்கமடைய செய்வதற்கான பிரத்யேக நிவாரண சிகிச்சையாகும். இந்த நியோ அட்ஜுவென்ட் தெரபி சிகிச்சையில் கீமோதெரபி, ஹோர்மோன் சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை இடம்பெறுகிறது. சத்திர சிகிச்சைக்கு முன்னதாக பரிசோதனை மூலம் கண்டறியப்பட்ட புற்றுநோய் கட்டிகளின் அளவுகளை சீரமைக்க இத்தகைய சிகிச்சையை வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிலருக்கு இத்தகைய சிகிச்சை ஒரு வருடம் கூட நீடிக்கலாம்.
அரிதாக சிலருக்கு இத்தகைய நியோ அட்ஜுவென்ட் தெரபி மூலம் கட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, அவருக்கு சத்திர சிகிச்சை அவசியமில்லாமலும் ஆகலாம். இதில் கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களை பெருகி கட்டிகளை உருவாக்குவதற்கும் முன்பே அதனை முற்றாக அழித்து விடுகிறது. ஹோர்மோன் சிகிச்சை என்பது சில வகையான புற்று நோய்கள் வளர்வதற்கும்... பெருகுவதற்கும்... பரவுவதற்கும்... ஹோர்மோன்கள் தேவைப்படும். இத்தகைய ஹோர்மோன் சிகிச்சை மூலம் அந்த ஹோர்மோனின் செயல்பாட்டை துண்டித்து, புற்றுநோய் கட்டிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. சிலருக்கு உயர் ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் மூலமாக கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோய் செல்களை அழித்து, அதன் அளவை குறைக்கின்றனர்.
இந்நிலையில் நியோ அட்ஜுவென்ட் தெரபி மார்பக புற்றுநோய், பெருங்குடல் ,நுரையீரல், புரோஸ்டேட், மலக்குடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்களின் கட்டிகளை அகற்றுவதற்கும், குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து சக்திரசிகிச்சை மூலம் வைத்தியர்கள் புற்றுநோய் கட்டிகளை அகற்றி, அதன் பின்னரான பராமரிப்பு சிகிச்சையையும் வழங்கி, இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்
வைத்தியர் வினய் சாமுவேல் தொகுப்பு அனுஷா.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM