பலனளிக்கும் பஞ்சாங்க வழிபாட்டு சூட்சமங்கள்..!

27 Jul, 2026 | 03:25 PM
image

எம்முடைய ஜாதகத்தில் நவகிரகங்களில் எந்த கிரகங்கள் வலிமை பெற்றுள்ளதோ ... அவற்றுக்கும் பஞ்ச அங்களைக் கொண்ட பஞ்சாங்கத்திற்கும் தொடர்பு உண்டு என்றும், இவர்கள் கிரக வலிமையை பொறுத்து பஞ்சாங்கத்திற்கான கிழமை நாதன் வழிபாடு- நட்சத்திர வழிபாடு - கரணநாதன் வழிபாடு- திதி வழிபாடு- நாமயோக வழிபாடு- ஆகியவற்றை மேற்கொண்டால் பலன் உடனடியாகவும், நிறைவாகவும் கிடைக்கும் என்பதை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனை உங்களது ஜாதகத்துடன் தொடர்பு படுத்தி, எந்த வழிபாட்டை மேற்கொண்டால்...? பலன் கிடைக்கும் என்பதனை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலிமை பெற்றிருந்தாலோ... குரு பகவான் சுபத்துவ தன்மை பெற்றிருந்தாலோ.. கிழமை நாதனுக்கான அதிபதியாக திகழும் குரு பகவானை வழிபடத் தொடங்குங்கள். நீங்கள் குரு பகவானின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும் குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபட வழிபட நினைத்தது விரைவாக நிறைவேறும்.

அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதி செவ்வாய் பகவான். உங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் வலிமையாக திகழ்ந்தால்... உங்களுடைய நட்சத்திர தெய்வத்தை வழிபட்டால், நீங்கள் நினைத்தது நடக்கும்.

அமாவாசை திதி முதல் பௌர்ணமி திதி வரையிலான 15 திதிகளுக்கும் அதிபதி சுக்கிரன். உங்களது ஜாதகத்தில் சுக்கிர பகவான் வலிமையாக இருந்தால்... நீங்கள் பிறந்த திதிக்குரிய வழிபாட்டையும், பிறந்த திதிக்கான ஆலய வழிபாட்டையும் உறுதியாக ஆயுள் முழுவதும் மேற்கொண்டால்... வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

நாம யோகங்களுக்கான அதிபதி புதன். உங்களது ஜாதகத்தில் புதன் பகவானின் வலிமை அதிகமாக இருந்தால்... நீங்கள் உங்களுடைய நாம யோகத்திற்கான வழிபாட்டை மேற்கொள்ள தொடங்கினால்.. வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

இதனைத் தொடர்ந்து கரணங்களுக்கான அதிபதி சனீஸ்வர பகவான். உங்களது ஜாதகத்தில் சனி பகவான் வலிமையுடன் இருந்தால்... நீங்கள் உங்களுடைய கரண நாதனை இறுக்கமாக கைப்பற்றி, வழிபடத் தொடங்கினால் ..ஆயுள் முழுவதும் நினைத்ததெல்லாம் நிறைவேறி, வெற்றியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சனி பகவான் - சுக்கிர பகவான்- புதன் பகவான் - செவ்வாய் பகவான் - குரு பகவான் தவிர்த்து ஏனைய கிரகங்களான சூரியன்- சந்திரன்- ராகு கேது ஆகிய கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தால்... அவர்கள் தந்தை -தாய் -அப்பப்பா -அப்பம்மா- ஆகியோரது ஆசி- வழிகாட்டல் ஆகியவற்றுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுத்து இறைவழிபாட்டை மேற்கொண்டால்.... வெற்றி கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53