மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளராக சசிதரன் விரேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இளைஞர் அணி தலைவரும், ஐக்கிய மாணவர் முன்னணியின் பிரதான இணைப்பாளரும், சட்டப் பட்டதாரியும் ஆவார்.

அத்துடன் இளம் வயதில் மட்டகளப்பு மாவட்டத்தின் உயரிய நிர்வாக பொறுப்பை பெற்ற முதல் நபர் சசிதரன் விரேஸ்வரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.