களுவாஞ்சிக்குடி பகுதியில் 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தாயும் பிள்ளையும் தனியாக வசித்து வந்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.