நாட்டின் பல பாகங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த வரும் நாட்களிலும்  தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, தென்மேற்குப் பகுதியிலும், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்தும் மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை  எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.