இந்­திய – அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதும் 2ஆவது இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று மெல்போர்ன் நகரில் நடக்­கி­றது.

3 போட்டி கொண்ட இந்தத் தொடரில் அடி­லெய்ட்டில் நடந்த முதல் இரு­ப­துக்கு 20 போட்­டியில் இந்­தியா 37 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. இதனால் இன்­றைய போட்­டி­யிலும் வென்று இந்­திய அணி தொடரை வெல்­லுமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஒருநாள் தொடரை இழந்த இந்­தி­யா­வுக்கு இரு­ப­துக்கு 20 தொடரை கைப்­பற்ற நல்ல வாய்ப்பு இருக்­கி­றது. துடுப்­பாட்டம் மற்றும் பந்­து­வீச்சில் சம­ப­லத்­துடன் இருக்கிறது.

ஆஸி. முதல் போட்­டியில் ஏற்­பட்ட தோல்­விக்கு பதி­லடி கொடுக்கும் ஆர்­வத்­துடன் இருக்­கி­றது. தொடரை இழக்­காமல் சமன் செய்யும் வகையில் அந்த அணி கடு­மை­யாக போராடும். சொந்த மண்ணில் விளை­யா­டு­வது ஆஸி.க்கு கூடுதல் பலம்.