`மெர்சல்' படத்திற்கு கிடைத்த மற்றுமொரு போனஸ்

07 Oct, 2017 | 02:55 PM
image

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு நீதிமன்றம் விதித்திருந்த தடையும் நேற்று நீங்கியது. அதுமட்டுமின்றி 'மெர்சல்' படத்திற்கு தணிக்கைக் குழுவில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் வரிகளில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், படத்திற்கு போனஸாக மற்றுமொரு பாடலை எழுதியிருப்பதாக பாடலாசிரியர் விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேஜிக் கலைஞராக நடிக்கும் விஜய்க்கு ஏற்ற மாதிரி ஒரு மேஜிக் பாடலாக அது அமையும் என்றும் விவேக் கூறியிருக்கிறார். 

படம்  வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கி, படம் தீபாவளிக்கு தயாராகி வருவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்திற்கு மற்றுமொரு போனஸ் கிடைத்திருக்கிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக உருவாகி வரும் 'மெர்சல்' படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி இருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்