தமது விநோதங்களை ஒரு போதும் நிறுத்த விரும்பாதவர்களுக்கு புதிய தலைமுறை வேகம் மற்றும் நவீன பாணியிலான சாதனங்களை வரவேற்கும் வகையில் தனது புதிய Y உற்பத்தி வரிசையை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது.

அபிமானத்தை வென்ற Huawei Yஉற்பத்தி வரிசையில் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களின் புத்தம்புதிய சேர்க்கையான Huawei Y7 உற்பத்தியை Huawei அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. அனைத்தும் புதிய வடிவமைப்பு அம்சங்களுடன், நீண்ட நேரம் நீடித்து உழைக்கும் Huawei Y7 ஆனது தேவையான அனைத்தையும் தமது தொலைபேசி சாதனத்தின் துணையுடன் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்ற சுயாதீன மற்றும் ஆர்வமேலீடு கொண்ட ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்காக கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

தொழிற்துறையில் உயர் மதிப்புக் கொண்ட வடிவமைப்புடன், smart power-saving தொழில்நுட்பத்தில் 4000 mAh அளவு பாரிய ஆற்றல் கொண்ட பற்றரியுடன், எப்போதும் தயாராகவுள்ள மகத்தான கமெராவையும் கொண்ட Huawei Y7 இடைவிடாத வாழ்வை முன்னெடுக்க உதவுகின்ற தொலைபேசியை நாடுபவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்குகின்றது.

சந்தையில் இப்புதிய உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் Huawei Sri Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான ருவான் கமகே கருத்து வெளியிடுகையில்,

“Huawei Y உற்பத்தி வரிசையில் பிந்திய அறிமுகமாக Y7 என்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியை அறிமுகம் செய்து வைப்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன்ரூபவ் இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு அதிக தெரிவுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பிற்கு இது உதவும் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. 

நாள் முழுவதும் வேலைப்பளுவுக்கு மத்தியில் தமது சாதனங்களின் துணையுடன் இணைப்புத்திறன் மற்றும் தேவையான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான மற்றும் சௌகரியமான ஒரு துணையாக இப்புதிய சாதனத்தின் அறிமுகம் விளங்கும்” என்று குறிப்பிட்டார்.

பார்வைக்கு எடுப்பான தோற்றத்துடனும், எந்தவொரு சூழ்நிலையிலும் கடுமையாகச் செயற்படவல்ல வகையிலும் Huawei Y7 வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் விளிம்புகள் கையில் சௌகரியமாகத் தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இயற்கையாகவே வளைவு கொண்டவையாக உள்ளதுடன், உலோத்தன்மையுடனான மேற்பாகம் மற்றும் தூய்மையான மேற்பரப்பு ஆகியன வலிமையான நேர்த்தியான மற்றும் தொழிற்துறையில் அழகுநயம் மிக்க தொலைபேசிச் சாதனமாக Huawei Y7 இனை மாற்றியமைத்துள்ளன. 5.5 அங்குல அளவிலான அதன் பாரிய HD முகத்திரையானது வியக்கவைக்கும் வர்ணங்கள் மற்றும் கிராபிக்ஸ் நுட்பங்களுக்கு இடமளிப்பதுடன், முகத்திரை 2.5D ஆக இருப்பதாலும், வளைந்த வடிவமைப்பைக் கொண்டிருப்பதாலும் அதன் துல்லியம் மேலும் சிறப்பாக உள்ளது.

கைகளில் மிகவும் சௌகரியமாக அதனை வைத்திருக்க முடிவதுடன். சாதனத்தின் வெளிப்புறமும் அதிசிறந்ததாக உள்ளது. பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட்போனிலிருந்து நேரடியாக விளையாட்டு, வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாரிய ஆற்றல் கொண்ட 4000 mAh பற்றரி மற்றும் Huawei smart power-saving தொழில்நுட்பம் ஆகியன நாள் முழுவதும் சாதனத்தை இடைவிடாது உபயோகிப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன், எங்கிருந்தும் மணித்தியாலக் கணக்கில் பாடல்களை செவிமடுத்து மகிழவோ அல்லது தமக்குப் பிடித்த வீடியோ விளையாட்டில் அடுத்த கட்டத்திற்குச் செல்லவோ முடிவதுடன், இவை அத்தனைக்கு மத்தியிலும் நாள் பூராகவும் தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகளைப் பேணவும் இடமளிக்கின்றது. 

Huawei Y7 ஆனது வலுவான  Qualcomm Octa-core processor, 2GB RAM மற்றும் 16 GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளமையால் அனைத்துச் செயற்பாடுகளும் மிக விரைவாகவும், சீராகவும் இடம்பெறுகின்றன.

Huawei Y7 இன் துணையுடன் இனிமேல் எந்தவொரு மகத்தான புகைப்பட வாய்ப்பையும் நீங்கள் தவற விடத் தேவையில்லை. 12MP பின்புற கமெரா அல்லது 8MP F2.0முன்புற வில்லைகள் என இரண்டின் மூலமாகவும் நீங்கள் காட்சிகளை தத்ரூபமாக வசப்படுத்திக் கொள்ள முடியும்.

இத்தொலைபேசி சாதனம் கறுப்பு மற்றும் பொன் நிறங்களில் கிடைக்கப்பெறுவதுடன் ரூபா 25,900 என்ற சில்லறை விற்பனை விலையில் நாடளாவியரீதியிலுள்ள சிங்கர் ஸ்ரீலங்கா காட்சியறைகள் மற்றும் Huawei அனுபவ மையங்கள் மூலமாகக் கிடைக்கப்பெறுகின்றது.

2016 ஆம் ஆண்டிற்கான உலகிலுள்ள 100 மிகச் சிறந்த பெறுமதிகொண்ட வர்த்தகநாமங்கள் மத்தியில் 47 ஆவது ஸ்தானத்தில் Huawei தரப்படுத்தப்பட்டுள்ளது. Interbrand வெளியிட்டுள்ள மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 70 ஆவது ஸ்தானத்தை Huawei  எட்டிப் பிடித்துள்ளது. இலங்கையில் வலுவான சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக Huawei தரப்பட்டுள்ளது என புகமு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.