உளவியல் நோய்க்குள்ளாகியிருந்த 59 வயது பௌத்த தேரர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரிவுக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்தார்.
கருவலகஸ்வெவ விகாரையைச் சேர்ந்த விஹினவே அங்கிராஜ (வயது 59) எனும் தேரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு படுக்கைக்குச் சென்றுள்ள இவர் சற்று நேரத்தில் எழுந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த மற்றொரு இளைஞனிடம் தான் நஞ்சருந்திவிட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது தெரியவந்ததாக இம்மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம் தெரிவித்தார்.
புத்தளம் வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின்னர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM