எம்­பி­லிப்­பிட்­டிய வளவ மிடி­யா­வத்த ஊட­க­வி­ய­லாளர் சங்­கத்தின் 24 ஆவது வரு­டாந்த மாநாடு எதிர்­வரும் 15 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9 மணி க்கு பலாங்­கொடை கூட்­டு­றவுச் சங்க மண்­ட­பத்தில் நடை­பெற உள்­ள­தாக சங்­கத்தின் செய­லாளர் பி.ஏ.பொடி­ம­ஹத்­தயா தெரி­வித்தார். 

அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சங்­கத்தின் அங்­கத்­தினர் அனை­வரும் கலந்து கொள்ளும் இவ் வைப­வத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான விசேட உரை­யொன்று இடம்­பெற உள்­ள­தா­கவும் சங்­கத்தின்  தோற்­று­விப்­பாளர் காலஞ்­ சென்ற சிறில் ஜெய­வீரவின் நினை­வாக உபகார சின்னங்களும் வழங்கி வைக்கப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.