தேங்காய் உற்­பத்தி வீழ்ச்­சிக்கு குரங்­கு­களின் சேட்­டையே கார­ண­மாகும். 10 இலட்சம் குரங்­­கு­க­ளினால் 1 இலட்சம் ஏக்கர் விளை­நி­லங்­களின் தெங்கு உற்­பத்­திக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.மேலும் யானை, பன்­றி­க­ளி­னாலும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. பெளத்த நாடா­னாலும் மிரு­கங்­களை பார்க்­கிலும் மனித குலத்தை பாது­காக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே, இந்த பிரச்­சி­னைக்கு காத்­தி­ர­மான முடிவு எடுக்க நேரிடும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். தெங்கு விளை­நி­லங்­களில் புதி­தாக வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­த­னாலும் தெங்கு உற்­பத்தி குறைந்­துள்­ளது. இதனை மக்கள் சாதா­ரண பிரச்­சி­னை­யாக கருதக் கூடாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

தேசிய உணவு உற்­பத்­தியை மேம்­ப­டுத்தும் முக­மாக ஜனா­தி­பதி தலை­மை யில் பல அமைச்­சுகள் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுக்கும் உணவு உற்­பத்தி வாரம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அநு­ரா­த­பு­ரத்தில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. விளைச்­சலை பெருக்­கிட ஒரு­மித்து எழுவோம் என்ற தொனி­ப்பொ­ருளின் கீழ் உணவு உற்­பத்தி செயற்­றிட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த திட்­டத்தின் பிர­தான நிகழ்வு நேற்று அநு­ரா­த­புரம், கெகி­ராவ பிர­தே­சத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

தற்­போது அரிசி மற்றும் தேங்காய் 100 ரூபா என்ற சுவ­ரொட்­டிகள் நாடு­பூ­ரா­கவும் ஒட்­டப்­பட்­டி­ருப்­ப­தனை நான் அவ­தா­னித்தேன். 

எனினும் இதற்கு அர­சாங்­கத்தின் மீது குற்­றம்­சு­மத்­து­வதில் அர்த்தம் கிடை­யாது. ஏனெனில் தெங்கு உற்­பத்தி முக்­கோண வல­யத்தில் இன்று வீட­மைப்பு திட்­டங்­க­ளினால் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. தெங்கு உற்­பத்­திக்­கான ஏக்கர் கணக்­கி­லான நிலங்கள் வீடுகள் நிர்­மா­ணிப்­ப­தனால் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. 

இதனை அனை­வரும் இல­கு­வாக கருதக் கூடாது. அத்­துடன் தெங்கு உற்­பத்­திக்கு மிரு­கங்­களின் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. இதன்­படி குரங்கு, பன்றி,யானை­களின் தாக்­கமும் அதி­க­ளவில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இலங்கையில் 10 இலட்சம் வரை­யான குரங்­குகள் உள்­ளன. இதில் ஒரு இலட்சம் ஏக்கர் வரை­யான தெங்கு உற்­பத்­திக்கு குரங்­குகள் வேட்டு வைக்­ கின்­றன. இது சாதா­ரண விட­ய­மல்ல. அது­மாத்­தி­ர­மன்றி மயில்­க­ளி­னாலும் பாதிப்­புகள் ஏற்­ப­டு­கின்­றன. கொழும்­பிலும் குரங்­கு­களின் எண்­ணிக்கை அதி­க­மாகும். 

எனினும் இதனை கட்­டுப்­ப­டுத்த முனைந் தால் பல சிக்கல்கள் ஏற்­படும். ஏனெனில் நாம் பெளத்­தர்­க­ள். பெளத்த தர்மத்தின் பிரகாரமே மிருகங்கள் விடயத்தில் முடிவுகளும் எடுக்க வேண்டியுள்ளது. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்றாலும் அதனை பார்க்கிலும் மனிதனை பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். ஆகவே, இந்த விடயத்தில் காத்திரமான தீர்மா னங்கள் எடுக்க நேரிடும் என்றார்.