19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றியீட்டி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் பங்களாதேஷில் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணியும் கனடா அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றியீட்டி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. நேற்றுமுன்தினம் பிஜிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 299 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது.
கனடாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் அதிரடியைக் காட்ட நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பண்டாரஇ பெர்னாண்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பெர்னாண்டோ 16 ஓட்டங்களுடன் வெளியேறஇ அடுத்து வந்த மெண்டிஸும் வந்தவேகத்திலேயே ஓட்டமேதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்துசென்றார்.
அதன்பிறகு பண்டாரவுடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் அசலங்க. இந்த ஜோடி கனடா அணியின் பந்துவீச்சை துவம்சம்செய்துவிட்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய பண்டார 84 பந்துகளுக்கு முகம்கொடுத்து 61 ஓட்டங்களை விளாச மறுமுனையிலிருந்து அசலங்க 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் தங்கள் பங்கிற்கு ஓட்டங்களை விளாசித் தள்ளினர். அஷான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 74 ஓட்டங்களைப் பெற்றார். டி சில்வா (51) அசரங்க (28) என ஓட்டங்களைச் சேர்த்தனர்.
இறுதியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்று கனடா அணிக்கு வெற்றி இலக்காக 316 ஓட்டங்களை நிர்ணயித்தது.
இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கனடா அணி 39.2 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 196 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கனடா அணி சார்பாக அர்ஸ்லான் கான் அதிகூடிய ஓட்டமாக 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி சார்பாக பந்துவீசிய பெர்னாண்டோஇ குமாரஇ நிமேஷ் மற்றும் சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகனாக இலங்கைத் அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவுசெய்யப்பட்டார்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்
இந்தத் தொடரின் பி பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிகொண்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 126 ஓட்டங்களுக்கு சுருண்டது. பதிலுக்கு வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 31.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்தியா – அயர்லாந்து
இந்திய – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு ஆடிய அயர்லாந்து 49.1 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
நேபாளம் – நியூஸிலாந்து
நேபாள – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 32 ஓட்டங்களால் நேபாளத்திடம் வீழ்ந்தது நியூஸி. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய நியூஸி. 206 ஓட்டங்களுக்கு சுருண்டு 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM