“பணவீக்கம் உயரும் நிலையில் அதிகரித்த மஹபொல கொடுப்பனவு போதுமா?” – சஜித் கேள்வி

Published By: Vishnu

23 Jul, 2026 | 05:14 AM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதிகரித்த மஹபொல கொடுப்பனவு போதுமானதா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேள்வி கேட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வருடத்துக்கு வருடம் பிரதான பணவீக்கம் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பிரகாரம் மே மாதம் 5.5 வீதத்தில் இருந்து ஜூன் மாதம் 6.8வீதமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் 1.3வீதத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ள இந்த தருணத்தில், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் படி ஒரு நபருக்கு 30 நாட்கள் வாழ்வதற்கு 17,315 ரூபா போதுமானது என தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் அதிகரிக்கும் இந்நிலையில் அதிகரித்து இருக்கும் மஹபொல கொடுப்பனவானது போதுமானதா என்ற கேள்வி எழுகின்றது .

நாட்டு மக்கள் வாழ்க்கைச் சுமையாலும், அழுத்தங்கள் பலவற்றாலும் பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அதிருப்தியுடன் கஷ்ட வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு வருடம் பிரதான பணவீக்கம் அதிகரிக்கும் இந்நிலையில், மஹபொல மாணவர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 30 நாட்கள் வாழ்வதற்கு ரூ. 17,315 ரூபா போதுமானதா என கேள்வியும் எழும்புகின்றது.

70வீத பணவீக்கம் காணப்படும் வேளை நாட்டில் வேறு அரசாங்கம் இருந்தது. இந்த தருணத்தில் 17,315 ரூபா வாழ்வதற்கு போதுமானது என பிரதமரே நீங்கள் நம்புகிறீர்களா என கேட்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த காலத்தில் போதைப்பொருளும் பாதாள உலகமுமே...

2026-08-11 11:17:31
news-image

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு...

2026-08-11 11:14:45
news-image

நீதிபதிகளின் பதவி நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதி...

2026-08-11 11:16:45
news-image

பொலன்னறுவையில் அதிசொகுசு பேருந்து - மோட்டார்...

2026-08-11 10:50:30
news-image

யானைகளின் பாதையில் ட்ரோனை இயக்கியவர் கைது

2026-08-11 11:01:38
news-image

மின்னேரியா தேசிய பூங்காவில் துப்பாக்கியுடன் ஒருவர்...

2026-08-11 10:34:11
news-image

குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் தொழில்நுட்பக்...

2026-08-11 09:44:02
news-image

ரிதீமாலியத்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் நிர்மாண...

2026-08-11 09:46:06
news-image

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார்...

2026-08-11 09:28:18
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு!

2026-08-11 09:27:07
news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40