19இன் கீழ் இளையோர் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவை வெற்றிகொள்ள இலங்கைக்கு மேலும் 317 ஓட்டங்கள் தேவை

Published By: Vishnu

22 Jul, 2026 | 09:35 PM
image

(நெவில் அன்தனி)

19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் கடைசியுமான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இளையோர் அணி பலமான நிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் 472 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை இளையோர் அணி போட்டியின் 3 நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கைக்கு மேலும் 317 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கை வெற்றிபெறுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகும்.

போட்டியின் 3ஆம் நாளான புதன்கிழமை (22) காலை தனது முதல் இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்க 128 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இலங்கை இளையோர் அணி சகல விக்கெட்களையும் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கையை விட 263 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தபோதிலும் இந்திய இளையோர் அணி ஃபலோ ஒன் கொடுக்கவில்லை.

மாறாக இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி லக்ஷியா ராய்ச்சந்தனி சதம் குவித்ததும் 3 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 411 (மனல் சௌஹான் 150, குஷாங்ரா ஓஜா 111, யாஷ்பர்தன் சௌஹான் 78, கிம்ஹான் மெண்டிஸ் 102 - 3 விக்., விக்னேஸ்வரன் 50 - 2 விக்., துல்னித் சிகேரா 69 - 2 விக்., செத்மிக்க செனவிரட்ன 90 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 148 (துல்னித் சிகேரா 31, செத்மிக்க செனவிரட்ன 25, திமன்த மஹாவித்தான 24, விரான் சமுதித்த 21, ரோஹித் யாதவ் 12 - 4 விக்., சிகுருபதி வெங்கடா 27 - 2 விக்., ப்ரணவ் ராகவேந்த்ரா 28 - 2 விக்., ஜெகநாதன் ஹேம்சுதேஷான் 34 - 2 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 208 - 3 விக். டிக்ளயார்ட் (லக்ஷியா ராய்ச்சாந்தனி 100 ஆ.இ., மனல் சௌஹான் 51 ஆ.இ., கவிஜ கமகே 42 - 2 விக், விக்னேஸ்வரன் ஆகாஷ் 19 - 1 விக்.)

இலங்கை (வெற்றி இலக்கு 472 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 155 - 4 விக். (சேனுஜ வேக்குனாகொட 64, விமத் தின்சார 55 ஆ.இ., விரான் சமுதித்த 31, சிகுருபதி வெங்கடா 25 - 3 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46