(நெவில் அன்தனி)
இலங்கை டென்னிஸ் சங்க கடினதரை டென்னிஸ் அரங்கில் இன்று நடைபெற்ற டேவிஸ் கிண்ண ஆசிய கடல்சூழ் பிராந்தியம் குழு 4க்கான ஏ குழு போட்டியில் கத்தாரை எதிர்த்தாடிய இலங்கை 2 - 1 என்ற ஆட்டங்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
கத்தாருக்கு எதிரான போட்டி மிகவும் கடினமானது என இலங்கை அணியின் விளையாடாத அணித் தலைவர் சன்கா அத்துக்கோறள தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது போலவே கத்தாரின் கடும் சவாலை முறியடித்தே இலங்கை இந்த வெற்றியை ஈட்டியது.
முதலாவது ஒற்றையர் போட்டியில் கத்தார் வீரர் முபாரக் அல்ஹராசியிடம் 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில (3 - 6, 6 - 4, 2 - 6) இலங்கை வீரர் அப்னா பெரேரா தோல்வி அடைந்தார்.
ஆனால, இரண்டாவது ஒற்றையர் போட்டியில் கத்தார் வீரர் மோஸ்ஸா அல்ஹராசியை 2 - 1 என்ற செட்கள் அடிப்படையில் (3 - 6, 6 - 4, 6 - 4) இலங்கை வீரர் தெஹான் விஜேமான்ன வெற்றிகொண்டு செட்கள் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற தீர்மானம் மிக்க இரட்டையர் போட்டியில் கத்தாரின் ஜபோர் அல்-முத்தாவா, முபாரக் அல்ஹராசி ஜோடியினரிடம் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கையின் சஹா கப்பிலசேன, அப்னா பெரேரா ஜோடியினர் 2 நெர் செட்களில் வெற்றிபெற்றனர்.
இரண்டு செட்களும் சமநிலை முறிப்புவரை சென்றதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்தது.
முதலாவது செட்டில் 7 (7) - 6 (2) எனவும் இரண்டாவது செட்டில் 7 (7) - 6 - (5) எனவும் இலங்கை ஜோடியினர் வெற்றிபெற்றனர்.
இலங்கை தனது அடுத்த போட்டியில் நொதர்ன் மரியானா ஐலண்ட்ஸ் அணியை வெள்ளிக்கிழமை எதிர்த்தாடும்.
கத்தாரும் நொதர்ன் மரியானா ஐலண்ட்ஸும் நாளை சந்திக்கும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM