(க.சிவலிங்கமூர்த்தி)
மனித வாழ்விடங்களுக்கும் இயற்கை அமைப்புகளுக்கும் இடையிலான இணைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ஜெஃப்ரி பாவா மூனமல் விருது 2027 ஆண்டுக்கான விண்ணப்பங்களைக் கோருவதாக ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
பெந்தோட்டையில் அமைந்துள்ள ஜெஃப்ரி பாவாவின் லுனுகங்கா தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (21) ஊடகவியலாளர்கள் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை மற்றும் லுனுகங்கா அறக்கட்டளையின் தலைவரும் முன்னணி கட்டடக் கலைஞருமான சன்ன தஸ்வத்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளையில், சுற்றாடல், நிலம், நீர், வனவிலங்குகள் மற்றும் இயற்கை அமைப்புகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை வழங்கும் புதிய வடிவமைப்புச் சிந்தனையை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விருது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லுனுகங்கா தோட்டத்திலுள்ள 'மூனமல்' (மகிழம்பூ) மரத்தின் பெயரிலிருந்தே இந்த விருதுக்கான பெயர் பெறப்பட்டுள்ளது. மனித வடிவமைப்புகள் மூலமாகவே ஒரு விடயம் அழிக்கப்படுகின்றது என்றால், அதே வடிவமைப்புச் சிந்தனையைக் கொண்டு எதையும் அழிக்காமல் பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணக்கருவே இதன் பிரதான நோக்கமாகும். ரிதிகல மற்றும் களுடிய பொக்குண போன்ற பழங்கால இடங்களின் இயற்கை சார்ந்த வடிவமைப்பு பாரம்பரியத்தை, 'ஸ்பாஞ்ச் நகரங்கள்' மற்றும் 'நீண்ட தூர வனவிலங்கு பாதைகள்' போன்ற உலகளாவிய எண்ணக்கருக்களுடன் இணைப்பதே இதன் இலக்காகும்.
இந்த மூனமல் விருது 'கட்டடச் சூழல்' மற்றும் 'பொதுக் கொள்கை' ஆகிய இரண்டு பிரதான பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு, குறைந்தது ஒரு வருடமாவது நிறைவுற்ற திட்டங்களைக் கொண்ட தனிநபர்கள், அமைப்புகள், சமூகக் குழுக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இதில் பங்கேற்க முடியும். உள்ளூர் மற்றும் சர்வதேச நடுவர்களால் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 8 முதல் 10 வரையிலான சிறந்த திட்டங்கள் சிறுபட்டியலிடப்படும். நடுவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும். இறுதி விருது வழங்கும் விழா ஜெஃப்ரி பாவா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதியை அண்மித்த நாளில் நடைபெறும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM