மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள் ஊடாக 2023 முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 105 நிறுவனங்கள் ஊடாக சட்டவிரோதமான முறையில் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவில் குறிப்பிட்டார்.
அரசாங்க நிதி பற்றிய குழு செவ்வாய்க்கிழமை (21) அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் கூடியது.இதன்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த காலங்களில் நாட்டில் இருந்து டொலர் பெறுமதியானது முறையற்ற வகையில் வெளியேற்றப்பட்டள்ளமை குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு எந்தவொரு பொருட்களும் இறக்குமதி செய்யப்படாமல், சுமார் 24,300 தந்திப் பரிமாற்றங்கள் ஊடாக இந்தப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம் அளித்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், 55 நபர்கள் மற்றும் 227 வங்கிப் கணக்குகளுடன் தொடர்புடைய 105 நிறுவனங்கள் இந்தப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையமை தெரியவந்துள்ளது.
வங்கிகளில் போலி கொடுப்பனவுகள் தயாரிக்கப்பட்டு, சுங்க ஆவணங்களையும் சமர்ப்பித்து இந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் 13 அரச மற்றும் தனியார் வங்கிகளின் தொடர்பும் கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 43 நிறுவனங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வலையமைப்பு டுபாயை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய சர்வதேச பணமோசடி நடவடிக்கையுடன் தொடர்புடையது என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இன்டர்போலின் உதவியுடன் டுபாயில் இருந்து இரு முக்கிய சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
சட்டவிரோத பணமோசடி வலையமைப்பு குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும், குற்றப் புலனாய்வுச் சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM