நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலய ஆடிவேல் விழா எதிர்வரும் திகட்கிழமை (27) முதல் வெள்ளிக்கிழமை வரை (31) நடைபெறவுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (28) இரத பவனி காலை 7.30 மணிக்கு 251 செட்டியார் தெரு, கொழும்பு 11, இல் அமைந்துள்ள ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு 339 காலி வீதி, கொழும்பு 4 அமைந்துள்ள ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி சென்று, இரவு 9 மணிக்கு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தை சென்றடையும்.
மேலும், அவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் 29 ஆம் திகதி புதிய கதிரேசன் மண்டபம் பம்பலப்பிட்டியில் மாலை 6 மணிக்கு மதுரை எம். பாலு (நாதஸ்வரம்) குழுவினரால் தவில் நாதஸ்வர கச்சேரி நடைபெறும். அதனைதொடர்ந்து 7 மணிக்கு சொல்லின் செல்வர் ஸ்ரீ. மணிகண்டனின் சிறப்பு பேருரை நடைபெறும். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
அதனை தொடர்ந்து 30 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு பிரமாண்ட பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 31 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு பம்பலப்பிட்டிய ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்திலிருந்து இரத பவனி புறப்பட்டு, மதியம் காலிமுகத்திடலை அடைந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தொடர்ந்து அதிகாலை 1 மணிக்கு இரத பவனி செட்டியார் ஆலயத்தை வந்தடையும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM