(செ.கவிஷனா)
இலங்கையில் டிஜிட்டல் நிர்வாக முறைமைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாக விரிவுபடுத்தப்பட்டு வரும் பின்னணியில், நாட்டின் அனைத்து தொழில்முனைவோரும் வர்த்தகர்களும் முழுமையான சட்ட இணக்கப்பாட்டை நோக்கி உடனடியாக மாறவேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தொழில்முனைவோருக்கு விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
கடந்த கால அரசியல் அமைப்புகளின் கீழ் சட்ட அமுலாக்கம் பலவீனமாக இருந்ததாலும், செலுத்தும் வரிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்ற எண்ணத்தில் வரிகளை தவிர்த்தல், இறக்குமதி பெறுமதியைக் குறைத்துக் காட்டுதல், சட்டவிரோதமான முறையில் சுற்றுச்சூழல் மற்றும் வணிக அனுமதிகளைப் பெறுதல், வரிகளைக் குறைக்க பல போலியான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை மட்டுமே நம்பியிருத்தல் போன்ற முறைகேடுகளில் பல வர்த்தகர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்பதை ஒத்துக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் ஊழலை ஒழித்து, சட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி, தரநிலைகளை மேம்படுத்தி நாட்டை புதிய பாதையில் கொண்டுசெல்கிறது.
எதிர்காலத்தில் சட்டத்தை மீறும் வணிக நடவடிக்கைகளுக்கு கடுமையான சட்ட அமுலாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் தனிநபர் அடையாள முறைமை மூலம் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்படும் என்பதால் இனிமேல் சட்டத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
அனைத்து வர்த்தகர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான கள நிலையை உருவாக்குவதே அரசின் நோக்கம் ஆகும். ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தொழில்முனைவோர் தங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உடனடியாக முறையான சட்டப்பூர்வமான வர்த்தக நடைமுறைகளுக்கு மாறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM