(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாய்மூல விடைக்கான 50 வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் சில கேள்விகள் கேட்பதற்கு எம்.பி.க்கள் வராத நிலையும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட, கால அவகாசம் கோரப்பட்ட நிலையுமே சபையில் காணப்பட்டது.
பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.இதனையடுத்து இடம்பெற்ற தினப்பணிகளைத் தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 10 மணிவரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது
இதன் பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாய்மூல விடைக்கான 50 வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த 50 வினாக்களில் சில வினாக்களுக்கான எம்.பி.க்கள் சபையில் இருக்கவில்லை. அதேவேளை கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு கால அவகாசம் கோரப்பட்டதுடன் இன்னும் சில கேள்விகளுக்கான பதில்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனால் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை வாய்மூல விடைக்கான 50 வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் மாலை 3,30 மணிக்குள் கேள்விகளும் பதில்களும் முடிவடைந்தன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM