முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குக - ரவிகரன் 

22 Jul, 2026 | 05:11 PM
image

வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்களையும் வழங்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுற்றுலா பிரதி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (22) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அங்கு ரவிகரன் கூறுகையில்,

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். ஆனால் தற்போதும் சுற்றுலாத்துறையில் முல்லைத்தீவு மாவட்டம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, தற்போதைய அரசாங்கம் சில விடயங்களுக்கு 2027ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டைச் செய்வதற்குத் திட்டமிட்டிருப்பதை அறியமுடிகின்றது.

கட்டட நிர்மானங்களுக்கு தற்போது அரசு மெல்ல மெல்ல அக்கறையைக் காட்டினாலும், சுற்றுலா வழிகாட்டலைச் சிறந்த முறையில் செயற்படுத்த தேவையான ஆளணி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு என்பன முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே காணப்படுகிறது.

சுற்றுலா தொடர்பான அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும், போதியளவு வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கும் மாவட்டத்துக்குரிய சுற்றுலா அலுவலகம் முக்கிய தேவையாகும்.

அதேபோல் சுற்றுலாத்துறைக்கான அளணியும் தேவைப்படுகிறது.

எனவே நிர்மாணங்களுக்கு மேலதிகமாக வினைத்திறனான சுற்றுலா வழிகாட்டலை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கான பிரத்தியேக உத்தியோகத்தர்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கும் ஏதுநிலை தங்கள் அமைச்சின்கீழ் காணப்படுகின்றதா? என ரவிகரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இதன்போது சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க பதிலளிக்கையில்,

வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான இடமாகக் காணப்படுகின்றது. உலகவங்கியின் நிதி உதவியில் நாம் ஒரு திட்டத்தினை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.

சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முல்லைத்தீவு பகுதிகளில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

இந்தப் பகுதிகளில் தங்குமிட வசதிகள் மிகவும் தரம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன.

இங்கு சுற்றுலாத்துறைக்குரிய போதியளவு வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

வருகைதரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதிவாய்ப்புகள் செய்துகொடுக்கப்படவேண்டும். ஆகவே இவ்வாறான விடயங்களில் நாம் அபிவிருத்திகளைச் செய்யவேண்டியிருக்கின்றது.

எம்மால் சுற்றுலா வலயங்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் சுற்றுலா அதிகாரசபையினூடாக அந்த அபிவருத்திகளைச் செய்யவிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் மாவட்டத்திற்குரிய சுற்றுலா அலுவலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்திக்கான ஆளணித் தொகுதியினர் இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் -என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13