யூஸ்டாக்கியன் ட்யூப் டிஸ்ஃபங்சன் எனும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

22 Jul, 2026 | 04:51 PM
image

எம்மில் சிலருக்கு திடீரென்று காது வலி விட்டு விட்டு வரக்கூடும். வேறு சிலருக்கு கேட்கும் திறனில் மந்த நிலை ஏற்படக்கூடும். சிலருக்கு காது சார்ந்த விடயங்களில் விவரிக்க இயலாத அசௌகரியங்கள் ஏற்படக்கூடும்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் யூஸ்டாக்கியன் குழாய் செயலிழப்பு பாதிப்பாக இருக்கலாம் என்றும், இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது என்றும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

காது அடைப்பு , உணவுகளை மெல்லும்போது அல்லது விழுங்கும் போது காதில் ஏற்படும் வினோத ஒலிகள், சீரான இடைவெளியில் ஏற்படும் காது வலி, கேட்கும் திறனில் மந்த நிலை... ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் யூஸ்டாக்கியன் குழாய் செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிடலாம்.

எம்முடைய காது பகுதியில் அதிலும் குறிப்பாக நடு செவி பகுதியையும், மூக்கு மற்றும் தொண்டையின் பின்புற பகுதியையும் இணைக்கும் வகையில் ஒரு காற்று பாதை உண்டு. இதனை யூஸ்டாக்கியன் குழாய் என குறிப்பிடுகிறார்கள். திடீரென்று உயரமான பகுதியில் பயணிக்கும் போதோ அல்லது ஆகாய விமானத்தில் பயணிக்கும் போதோ எம்முடைய சமநிலை தவறி, காதில் அடைப்பு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இத்தகைய தருணத்தில் ஏற்படும் எதிர்பாராத அழுத்தத்தை சமநிலைப்படுத்துவது தான் யூஸ்டாக்கியன் குழாயின் முதன்மையான பணியாகும். இவை நடுக்காது பகுதியில் சுரக்கப்படும் சுரப்புகளை வெளியேறுவதற்கும் உதவுகிறது. இந்தக் குழாயில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால்... கேட்கும் திறனில் பாதிப்பை உண்டாக்கும். இதன் காரணமாக செவிகளின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டிய காற்று கிடைக்காமல் போகக் கூடும். பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்நாளில் சிலமுறையேனும் இத்தகைய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

சளி ,காது பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்பு, மூக்கடைப்பு ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு விமான பயணம்- ஸ்கூபா டைவிங் எனப்படும் சாகச விளையாட்டு -மலையேற்றம்-  ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிகளவில் ஏற்படுகிறது.‌ பெரும்பாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் இரண்டு வாரங்களில் சிகிச்சை இல்லாமல் தானாக சரியாகிவிடும். ஆனால் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.... இதற்கு சிகிச்சை அவசியம்.‌ இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் பிரத்யேக பரிசோதனையை மேற்கொண்டு சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

வைத்தியர் அப்துல் ரஹீம் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேஸ் கீஸர் சிண்ட்ரோம் எனும் பாதிப்பிற்குரிய...

2026-08-17 15:34:34
news-image

ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் : சிறுநீரக பாதிப்பிற்கான...

2026-08-15 17:08:15
news-image

மலக்குடலில் ஏற்படும் கட்டிகளை அகற்றி நிவாரணமளிக்கும்...

2026-08-14 14:28:38
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-08-13 18:12:25
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் எக்ஸ்ட்ராகார்போரியல்...

2026-08-13 18:14:22
news-image

நுரையீரல் பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-08-12 16:05:53
news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44