எம்மில் பலரும், 'நானும் தான் நாளாந்தம் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால்..... அவரைப் போல் முன்னேற முடியவில்லை' என்று பொறாமையால் புலம்பத் தொடங்கினால்... உங்களையும் அறியாமல் உங்களை தரித்திரம் ஆக்கிரமித்து விடும்.
அதன் பிறகு நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றம் என்பது கிடைக்காது. எம்முடைய வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் இறைவழிபாட்டை மேற்கொள்ளும் போது இறைவனிடம், 'நானும் தான் உனக்கு நாளாந்தம் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறேன்.
ஆனால் எம்முடைய கஷ்டம் தீர்ந்தபாடில்லையே..' என மனதிற்குள் நினைத்தாலும், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலின் அளவு அதிகரித்து தரித்திரம் உண்டாகும். வேறு சிலருக்கு எங்கேனும் பயணம் மேற்கொள்ளும் போதோ அல்லது பூங்காக்களில் அமர்ந்திருக்கும் போதோ அவர்கள் முகத்திற்கு அருகே சிறிய அளவிலான கருப்பு வண்ண பூச்சி ஒரு விதமான விரும்பத்தகாத ஒலியுடன் எம்மை சுற்றி சுற்றி வரும்.
அதனை கைகளால் விரட்டினாலும் மீண்டும் வரும். இவை விரைவில் தரித்திரம் எம்மை அணுகுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இத்தகைய நிலையில் உள்ளவர்கள் முதலில் தங்களது உள்ளத்தில் மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் இயல்பை குறைத்துக் கொள்வதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சில எளிய வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் இத்தகைய தரித்திரம் எம்மிடமிருந்து விலகும்.
இதற்கு தேவையான பொருட்கள் : பன்னீர்- மண்ணாலான அகல் விளக்கு - நெய் -வார்கோல்
நாளாந்தம் பன்னீரில் எம்முடைய முகத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் சின்ன பூச்சிகள் உங்களுடைய முகத்திற்கு அருகே பறக்கத் தொடங்கினால்.. உடனடியாக பன்னீரில் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும்.
அதனைத் தொடர்ந்து பஞ்சமி திதி நாளன்று வீட்டில் ஐந்து மண்ணாலான அகல் விளக்கில் நெய் ஊற்றி, தீபமேற்றி வணங்கிட வேண்டும். அருகில் இருக்கும் ஆலயத்திற்கு ஐந்து என்ற எண்ணிக்கையிலான தரையை தூய்மைப்படுத்தும் வார்க்கோலை தானமாக தர வேண்டும்.
இதனை நீங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் போது தரித்திரம் விலகத் தொடங்கி , அதிர்ஷ்டம் ஏற்பட தொடங்கும். அதன் பிறகு உங்களது பொறாமையற்ற கடின முயற்சி... பலன் தந்து முன்னேற்றம் உண்டாகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM