கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிமுருகவேல் விழா 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து ஜூலை 29ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு பன்னீர்க்காவடி மற்றும் பாற்குடம் எடுத்து வீதி வலம் வந்து மூலவருக்கும், ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கும் ஸ்நபனாபிஷேகமும் விசேட அலங்கார பூஜையும் இடம்பெறவுள்ளது.
அன்று மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஜூலை 30ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு விசேட பூஜை இடம்பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க சித்திர ரதத்தில் எழுந்தருளி வெளி வீதி உலா நடைபெறவுள்ளது.
இச் சித்திர ரதமானது ஜென்துப்பிட்டி தெரு, மேட்டுத்தெரு, ஆட்டுப்பட்டித்தெரு, கபூஸ் லேன், சென் ஜோன்ஸ் வீதி, மெயின் வீதி, 5ம் குறுக்குத்தெரு, நெறிஸ் ரோட், 4ம் குறுக்குத்தெரு, கெய்சர் வீதி, பூந்தோட்ட வீதி, மெயின் வீதி, செட்டியார் தெரு, ஸ்ரீ கதிரேசன் வீதி, ஆண்டிவால் தெரு, கன்னாரத்தெரு மற்றும் ஜின்துப்பிட்டித்தெரு வழியாக பவனி வந்து மீண்டும் திருக்கோயிலைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM