சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டம்!

22 Jul, 2026 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட கூட்டம்  வியாழக்கிழமை (23)  இடம்பெறவுள்ளது. மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகள் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதிநிதித்துவப்படுத்தாத சகல எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்கும் நோக்கில், கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தனித்தனியாகத் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டுப் போராட்டமொன்றை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31