வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால் வெள்ள அனர்த்தங்களும் ஏற்படுகின்றன - பத்மநாதன் சத்தியலிங்கம்!

22 Jul, 2026 | 03:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் புகையிரத திணைக்களத்திற்கும் ஒதுக்கப்பட்ட காணிகள் வெவ்வேறு தேவைகளுக்காக பல்வேறு நிறுவனங்களால் கையகப்படுத்தியுள்ளதால் நீர் வழிந்தோட வழியின்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதுடன், வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு அவை காரணமாக அமைகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில்  வாய்மூல விடைக்கான கேள்வி நேரரத்தின் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் புகையிரத திணைக்களத்திற்கும் ஒதுக்கப்பட்ட காணிகள் இப்போது வெவ்வேறு தேவைகளுக்காக பல்வேறு நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகின்றன.

இப்போது நாட்டில் டெங்கு நிலைமை அதிகரிக்க காரணம் நீர் வழிந்தோடும் பிரதேசங்கள் கையகப்படுத்துவதால் நீர் போக வழியின்றி நீர் நிலைகள் உருவாகி நுளம்புகள் பெருகுகின்றன. தொற்றுநோய்கள் தீவிரமடைந்துள்ளன.

அத்துடன் வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால் வெள்ள அனர்த்தங்களும் ஏற்படுகின்றன. எதிர்வரும் ஒக்டோபர்  மற்றும்  நவம்பர் மாதங்களில் வெள்ள அனர்த்த நிலைமை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுவதால் இது  தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை என்னவென்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து  பதிலளித்த போக்குவரத்துஇ  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்தின்  கருத்துக்களுக்கு இணங்குகின்றேன். வீதி பராமரிப்புக்கு உட்பட்ட வடிகாண்கள் மற்றும் நீரோடைகள் மட்டுமே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பராமரிக்கப்படுகின்றன.

வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத கட்டிடங்கள் உள்ளிட்ட அவ்வாறான இடங்கள் கிடையாது. ஏனைய இடங்களில் உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

தற்போது டெங்கு நிலைமையால் சிரமதான பணிகளை முன்னெடுத்து புகையிரத திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் பாவனையின்றி இல்லாத இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகின்றது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50