வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ பஸ் சேவை: அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

22 Jul, 2026 | 03:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்தில்  மெட்ரோ பஸ் சேவைகளை அடுத்த ஆண்டுமுதல்  அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்து சேவை  வினைத்திறனாக்கப்படும் என  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம்  முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மேலதிக கேள்வியை முன்வைத்த  பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான விசேட தேவையுடையோர் இருக்கின்றனர். மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் பெரும்பாலான நோயாளர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு போகும் சூழல் நிலவுவதால் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குறைந்தது ஒருநாளைக்கு ஒரு மெட்ரோ பஸ் சேவையை உங்களால் ஒழுங்கு செய்ய முடியுமாக இருந்தால் அதன்மூலம் பெரும்பாலான நோயாளர்கள் பயனடைவார்கள். இதனால் அதனை செய்ய முடியுமா? என்றார்.

இதற்கு  எழுந்து பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அடுத்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.வடக்கு மாகாணத்தில்  பொது போக்குவரத்து சேவையை வினைத்திறனாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் அதிசொகுசு பேருந்து விபத்து: மோட்டார்...

2026-08-11 10:35:38
news-image

மின்னேரியா தேசிய பூங்காவில் துப்பாக்கியுடன் ஒருவர்...

2026-08-11 10:34:11
news-image

குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பில் தொழில்நுட்பக்...

2026-08-11 09:44:02
news-image

ரிதீமாலியத்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் நிர்மாண...

2026-08-11 09:46:06
news-image

லக்கலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமனார்...

2026-08-11 09:28:18
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு!

2026-08-11 09:27:07
news-image

இன்றைய வானிலை

2026-08-11 06:15:18
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு நீதித்துறைக்கு மரண...

2026-08-11 06:13:40
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக பாடலி...

2026-08-11 06:10:23
news-image

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்...

2026-08-11 05:27:31
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு...

2026-08-10 14:02:40
news-image

அரசாங்கம் பொலிஸாரை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது...

2026-08-10 16:44:28