பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர் காயம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய தகவல்!

22 Jul, 2026 | 02:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர். பகிடிவதை கலாசாரத்தை ஒழிப்பதற்கு விசேட செயலணி ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு விசேட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22)  நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது

2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர். படிகிவதை தொடர்பில் இக்காலப்பகுதியில் 141 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடுமையான காயம் ஏற்படுத்தியம தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் 28 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச பல்கலைக்கழக நிகழும் மனிதாபிமானமற்ற பகிடிவதைகளைத் தடுப்பதற்க்காக நிறுவன மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய பகிடிவதைகளை ஒழிப்பதற்குரிய வழிமுறைகளை முன்வைப்பதற்கு விசேட செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த செயலணி ஊடாக சகல பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களின் உளவியலை மேம்படுத்துவதற்கு உரிய விசேட திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான மஹபொல மற்றும் மாணவர் உதவுத்தொகை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50