மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி வடபகுதிக்கான விஜயமொன்றை இன்று மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கிற்கு இரு நாள் விஜயம் மேற்கொள்ளும் மத்திய வங்கியின் ஆளுனர் அங்கு, வடபகுதி மக்களின் கடன்சுமைப் பிரச்சினை பற்றி விரிவாக ஆராயவுள்ளதுடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்  மூலோபாயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளார்.

வடக்கில் இதற்காக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில், மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கமநல - கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 

இதேவேளை, வடக்கில் அனுமதிபெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள், சமுர்த்தி கிராமிய வங்கிகள் ஆகியவற்றின் பிரிதிநிதிகளுடனான சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதொடர்பிலான கூட்டங்கள் இன்று யாழ்ப்பாணத்திலும் நாளை கிளிநொச்சியிலும் இடம்பெறவுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.