ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழான இலகுரக புகையிரத கருத்திட்டம் : மீள அமுல்படுத்த கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கவில்லை - போக்குவரத்து அமைச்சர்

22 Jul, 2026 | 12:54 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகுரக புகையிரத கருத்திட்டத்தை மஹிந்த - கோட்டா அரசாங்கம் இரத்துச் செய்ததால் ஜப்பான் நிறுவனத்துக்கு பெருமளவிலான நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மீள அமுல்படுத்துவது குறித்து கொள்கை அடிப்படையில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகுரக புகையிரதத் கருத்திட்டம் 2020.09.28 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் இரத்து செய்யப்பட்டது.

இந்த திட்டம் வினைத்திறனற்றது, அதிக செலவு மற்றும் கொழும்பு நகருக்கு பொறுத்தமற்றது என்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தை மஹிந்த - கோட்டாபய அரசாங்கம் இரத்துச் செய்தது.

இந்த திட்டத்தை இரத்துச் செய்ததால் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட நட்டம் இதுவரையில் மதிப்பிடப்படவில்லை.இருப்பினும் இரண்டு நிறுவனங்களுக்கு நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய முதல் நிறுவனத்துக்கு 159 மில்லியன், 7 இலட்சத்து 77599 யென் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிறுவனத்துக்கு 1.003 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

இலகுரக புகையிரத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் 09 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறித்த ஜப்பான் நிறுவனம் காலதாமதமான நட்டஈடு கொடுப்பனவுக்கு மேலதிக தொகையை கோரியுள்ளது. இது குறித்து ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது குறித்து கொள்கை அடி ப்படையில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானம் எடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50