டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் விடுவிப்பு 

22 Jul, 2026 | 11:57 AM
image

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட கட்சித் தலைவர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்ட சத்ராசல் மைதானத்திலிருந்து ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அத்துடன் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி, மந்திர் மார்க் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி அந்த பொலிஸ் நிலையத்துக்குச் சென்றதையடுத்து, பிரியங்கா காந்தியும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னணி 

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சர்ச்சை மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திலும் வெளிப்புறத்திலும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தலைமையில், டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணியாகச் சென்றனர்.

பிரதமர் இல்லம் முன்பாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பாதுகாப்பு காரணங்களால் அங்கு குவிக்கப்பட்டிருந்த டெல்லி பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களையும் ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்தினர்.

இjid, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பேருந்துகள் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானைக் கூட்டத்திற்காக சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டது...

2026-08-19 16:58:11
news-image

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

2026-08-19 16:45:54
news-image

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் அரச பெண்...

2026-08-19 16:28:12
news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37