இந்தியாவின் அசாமில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி கடந்த 24 மணித்தியாலங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை மொத்தமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெள்ளத்தினால் அசாம் மாநிலத்தின் உள்ள 16 மாவட்டங்களில் மொத்தமாக 5.64 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா முதலான முக்கிய நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து ஓடுவதால், பல கிராமங்கள், விவசாய நிலங்கள், வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வெள்ளம் நிரம்பிய பகுதிகளில் ரயில் போக்குவரத்து சேவைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM