ஹொலிவூட்டின் முன்னணித் திரைப்படங்களான 'Godzilla vs. Kong' (2021) மற்றும் அதன் தொடர்ச்சியான 'Godzilla x Kong: The New Empire' (2024) ஆகிய திரைப்படங்களில் 'ஜியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற காதுகேளாத இளம் நடிகை கெய்லி ஹாட்டில் அமெரிக்காவின் மேரிலாந்த மாநிலத்தில் இடம்பெற்ற கோரக் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேரிலாந்து மாநிலத்தின் அய்ஜாம்ஸ்வில்லி பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை 2:50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெய்லி ஹாட்டில் பயணித்த 'ஹோண்டா அக்கார்ட்' கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோர கால்வாயில் பலமாக மோதியுள்ளது. காரின் அதிக வேகமே விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரை ஓட்டிச் சென்ற 19 வயது இளைஞர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 18 வயதுடைய கெய்லி ஹாட்டிலின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிறவியிலேயே காதுகேட்காத கெய்லி ஹாட்டிலின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் மாற்றுத்திறனாளிகளாவர்.
அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் அமெரிக்க சைகை மொழியில் வெளியிட்ட காணொளி பதிவில், "என் மகளின் உடலை மீட்பதற்காக மேரிலாந்து நோக்கிப் பயணிக்கிறேன். இந்த இழப்பால் நாங்கள் உடைந்துபோயுள்ளோம். காரை ஓட்டிய இளைஞரை நான் மன்னித்துவிட்டேன்; இந்தச் சம்பவம் உன் எதிர்காலத்தைப் பாழாக்க அனுமதிக்க வேண்டாம்" என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹொலிவூட் திரைப்படங்களில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளத்தையும் பிரதிநிதித்துவத்தையும் ஏற்படுத்திய கெய்லி ஹாட்டிலின் மறைவிற்குத் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM