இந்தியாவுக்கு எதிரான 2ஆவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோசமான நிலையில் இலங்கை

22 Jul, 2026 | 08:59 AM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும்   19 வயதுக்குட்பட்ட இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இந்திய இளையோர் அணி முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 411 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை இளையோர் அணி 2ஆம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

திமன்த மஹாவித்தான (24), விரான் சமுதித்த (21), துல்னித் சிகேரா (31) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரோஹித் யாதவ் 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சிகுருபதி வெங்கடா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரணவ் ராகவேந்த்ரா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 411 ஓட்டங்களைக் குவித்தது.

எண்ணிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னரே முதல் இரண்டு விக்கெட்களை இழந்த இந்திய இளையோர் அணி 3ஆவது, 4ஆவது விக்கெட்களில் பகிரப்பட்ட 100 ஓட்டங்களுக்கு மேற்பட்ட இணைப்பாட்டங்கள் மூலம் பலமான நிலையை அடைந்தது.

குஷாக்ரா ஓஜா, அணித் தலைவர் யாஷ்பர்தன் சௌஹான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களையும் குஷாக்ரா ஓஜா, மனல் சௌஹான் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 275 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

குஷாக்ரா ஓஜா 111 ஓட்டங்களையும் யாஷ்பர்தன் சௌஹான் 78 ஓட்டங்களையும் மனல் சௌஹான் 150 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிம்ஹான் மெண்டிஸ் 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விக்னேஷ்வரன் ஆகாஷ் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துல்னித் சிகேரா 69 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் செத்மிக்க செனவிரட்ன 90 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40