(நெவில் அன்தனி)
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 43 ஓட்டங்களால் கண்டி றோயல்ஸ் அணி இலகுவாக வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி றோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் லஹிரு உதார 51 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் தலா 29 ஓட்டங்களையும் குசல் பெரேரா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்ளைப் பெற்று தோல்வி அடைந்தது.
இதில் சாஹிப்ஸதா பர்ஹான் 74 ஓட்டங்களையும் ரீஸா ஹென்றிக்ஸ் 27 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
நுவன் துஷார 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷான் ஹேமன்த 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM