உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதால் பாரிய பிரச்சினை ஏதும் ஏற்படாது - தயாசிறி ஜயசேகர 

21 Jul, 2026 | 05:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2026ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதால் பாரிய பிரச்சினை ஏதும் ஏற்படாது. நீதிமன்றத்தால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை ஊடாக இதற்கு தீர்வு காண வேண்டும். பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொது மனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவது இதுவே முதன்முறையாகும். இது சிறந்ததொரு செயற்பாடு. அரசாங்கத்தின் சிறந்த விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். குறைகளை மாத்திரம் சுட்டிக்காட்டுவதில்லை.

இந்த குழுக்களில் முன்வைக்கப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். சிறந்த அரச நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் எவ்வித மாறுபாடும் கிடையாது.

கடந்த காலங்களில் உயர்தர பரீட்சைக்கு 800 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் வழங்கப்பட்டன. ஆனால் 2026ஆம் ஆண்டு 709 நாட்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் பரீட்சையை நடத்துவதற்கு தேசிய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பரீட்சையை இரண்டு மாதத்துக்கு மாத்திரம் பிற்போட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துமாறே கோருகிறோம். இரண்டு மாதங்களுக்கு பரீட்சையை பிற்போடுவதால் ஏதும் பாதிப்பு ஏற்படாது. நீதிமன்றம் ஊடாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை ஊடாகவே இதற்கு தீர்வு காண முடியும்.

தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாணவர்களின் உரிமைகள் பற்றி பேசியது. ஆகவே தற்போது மாணவர்களின் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தி அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50