எம்மில் சிலருக்கு நெஞ்செரிச்சல்- சோர்வு -தசை பிடிப்பு- உடல் எடை குறைவு- பேதி -போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது, ஏதேனும் உடல் நல கோளாறு என நினைத்து சாதாரண சிகிச்சையை மேற்கொள்வதுண்டு.
ஆனால் இத்தகைய அறிகுறிகள் பான்கிரியாடிக் நியூரோஎண்டோகிரைன் ட்யூமர் எனப்படும் கணையத்தில் உள்ள ரத்த நாள கட்டி பாதிப்பின் அறிகுறியாக இருக்க கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
எம்முடைய கணைய பகுதியில் உள்ள ஹோர்மோன்களை உற்பத்தி செய்யும் செல்களில் ஏற்படும் அதீத வளர்ச்சியின் காரணமாக தீங்கற்ற கட்டி மற்றும் புற்று நோயாக மாறக்கூடிய அபாயம் உள்ள கட்டி என இரண்டு வகையினதான கட்டி பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இவை புற்றுநோய் செல்களை விட மெதுவான வளர்ச்சியை பெற்றாலும்.. அரிதான பாதிப்பு என்றாலும்... இதற்கு உரிய காலத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய அரிய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு, திடீரென்று உடல் எடை குறைவு, அடிவயிற்றில் வலி அல்லது வீக்கம், சோர்வு, பலவீனம் ஆகியவை அறிகுறிகளாக வெளிப்படும்.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, கணைய திசு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
இதைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை - ஹோர்மோன் சமச்சீர் சிகிச்சை - கீமோதெரபி - கதிர்வீச்சு சிகிச்சை - ஆகியவற்றை ஒருங்கிணைந்தோ அல்லது பிரத்யேகமாகவோ வழங்கி நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் செந்தில்குமார் - தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM