(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஹஜ் நிதியம் நியாயாதிக்கம் அல்லாத நிதியமொன்றாக உள்ளதால் இதுவரை இது கணக்காய்வு செய்யப்படவில்லை. தேசிய ஹஜ் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சட்டவரைஞர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட பின்னர் ஹஜ் நிதியத்தை கணக்காய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் ருவன் மாபலகமவினால் கேட்கப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ருவன் மாபலகம எம்,பி, தனது கேள்வியில், ,
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு சொந்தமான ஹஜ் நிதியத்தில் தற்போது உள்ள மீதி யாது?, மேற்படி நிதியத்திற்கு பணம் வரவு வைக்கப்படும் விதம், இந்த நிதியத்தின் பணம் வருடாந்தம் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான ஹஜ் நிதியத்தில் 2026.06.10 திகதிவரை நடைமுறைக் கணக்கில் 20இலட்சத்தி 1497 ரூபாவும் சேமிப்புக் கணக்கில் 317 கோடியே 20 இலட்சத்தி 6610 ரூபாவும் மீதி இருக்கிறது.
இந்த நிதியத்துக்கு பின்வரும் முறையில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதாவது, புனித ஹஜ் யாத்திரை முகவர் நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குப் பெற்றுக் கொண்ட விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபா,தெரிவு செய்யப்பட்ட ஹஜ் யாத்திரை முகவர் நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணம் 20 இலட்சம் ரூபா,
தெரிவு செய்யப்பட்ட ஹஜ் யாத்திரை முகவர் நிறுவனங்களினால் ஒரு ஹஜ் யாத்திரிகரிடம் பெற்றுக் கொண்ட நிருவாகக் கட்டணம் 5 ஆயிரம் ரூபா, ஹஜ் யாத்திரிகர்களைப் பதிவு செய்வதற்காக ஹஜ் யாத்திரிகர் ஒருவரிடம் அறவிடும் கட்டணம் 5ஆயிரம் ரூபா, புனித உம்ரா யாத்திரைக்காக முகவர் நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்காக விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குப் பெற்றுக் கொண்ட விண்ணப்பக் கட்டணம் 1000ரூபா, தெரிவு செய்யப்பட்ட உம்ரா யாத்திரை முகவர் நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட பதிவுக் கட்டணம் 50ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் ஹஜ் நிதியத்தின் ஊடாக கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை. என்றாலும் இந்த ஆண்டில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக சேதமடைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மீள கட்டியெழுப்புவதற்காக ஹஜ் நிதியத்தில் இருந்து தித்வா நிதியத்துக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் ஊடாக 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஹஜ் நிதியம் நியாயாதிக்கம் அல்லாத நிதியமொன்றாக உள்ளதனால் இதுவரை இது கணக்காய்வு செய்யப்படவில்லை. என்றாலும், தற்போது தேசிய ஹஜ் சட்டம் தயார் செய்யப்பட்டு அமைச்சின் ஊடாக சட்டவரைஞர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஹஜ் சட்டத்தின் ஹஜ் நிதியத்தை கணக்காய்வு செய்வது தொடர்பான பல யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த நிதியத்தை கணக்காய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர், இந்த சட்டத்தின் ஊடாக ஹஜ் யாத்திரிகர்களுக்கு பாரிய நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியுமாகும் என நம்புக்கிறோம். அத்துடன் ஹஜ் யாத்திரிகளுக்கு எமது அமைச்சு ஊடாக பல்வேறு வசதிகளை நாங்கள் செய்துகொடுத்து வருகிறோம். குறிப்பாக கடந்த காலங்களில் ஹஜ் கடமைக்கு செல்லும் ஒரு யாத்திரியிடம் 20 லட்சம் முதல் 25லட்சம் ரூபாவரை அறவிடப்பட்டுவந்த தொகையை நாங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதேபோன்று இந்த செலுத்த வேண்டிய கட்டணத்தை அவர்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு அதனை செலுத்துவதற்கு கடன் தொகை ஒன்றை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM