இலங்கை கடற்படையினரால் நேற்று (20) திங்கட்கிழமை நீர்கொழும்பு, குடாபாடுவை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டுசெல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பீடி இலை மற்றும் டிரக்டர் ரக வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேற்கு கடற்படை கட்டளைக்குக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி நிறுவனத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு குடாபாடுவை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய டிரக்டர் வாகனமொன்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு விற்பனைக்னாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த, 1,456 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியுடன் குறித்த டிரக்டர் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட டிரக்டர் வண்டி மற்றும் பீடி இலைத் தொகுதி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM