ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில் இலங்கை பங்கேற்பு!

21 Jul, 2026 | 03:53 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உலகின் மிகப்பெரிய சர்வதேச கடற்படைப் பயிற்சியான ரிம்பேக் ஒருங்கிணைந்த கடற்படை கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படைப் பிரிவினர் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர்.

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் நடைபெற்று வரும் இந்த கூட்டுப் பயிற்சியில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கை பங்கேற்றுள்ளது.

அமெரிக்க கடற்படை, அமெரிக்க மரைன் கோர்ப்ஸ் மற்றும் பிற 28 நாடுகளைச் சேர்ந்த ஆயுதப்படைகளுடன் இணைந்து இலங்கை வீரர்கள் தங்களது போர் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மனிதநேய உதவி, பேரிடர் நிவாரணம், நகரப்புற தேடல், மீட்புப் பணிகள், ஹெலிகொப்டர் செயல்பாடுகள், இரசாயனம், உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி அவசரகால பதிலளிப்பு போன்ற முக்கியமான அவசரகால மற்றும் பாதுகாப்புப் பணிகளில் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையேயான அவசரகாலத் தயார்நிலையை அதிகரிப்பதோடு, படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்துகிறது.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் சர்வதேச நெருக்கடிகளை ஒன்றாக இணைந்து எதிர்கொள்ளவும், ஒரு சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் இந்த கூட்டுப் பயிற்சி பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க பசிபிக் கடற்படை 3வது துணைத் தளபதி ரியர் அட்மிரல் பெய்லி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26