மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று இனந்தெரியாதோரினால் கொள்ளை சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டில் இருந்த 200 கிலோ கிராம் எடையுள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து ஒரு தொகை தங்கமும், இலங்கை ரூபாய் ஒரு இலட்சமும், வெளிநாட்டு பணம் ஒரு இலட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் பிடிபடாத நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.