ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு !

Published By: Digital Desk 3

21 Jul, 2026 | 01:43 PM
image

ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், குறித்த தொழிற்சாலையிலிருந்து ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை பரவியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்துவதற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகர சபையின் 5 தீயணைப்பு வண்டிகளுடன் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அவசரகால மீட்பு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்து தொடர்பில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் சம்பவத்தின் முழுமையான விபரங்களை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டெம்பர் முதல் அனைத்து வாகன தண்டப்...

2026-08-19 17:25:41
news-image

22ஆம் திருத்தம் குறித்து கலந்துரையாட சட்டத்தரணிகள்...

2026-08-19 17:23:36
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் UNODC அதிகாரி...

2026-08-19 17:13:58
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வயது முதிர்ந்த ஒட்டகச்சிவிங்கி...

2026-08-19 16:29:03
news-image

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில்...

2026-08-19 16:25:49
news-image

''டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க...

2026-08-19 15:45:01
news-image

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச்...

2026-08-19 15:43:18
news-image

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

2026-08-19 15:23:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்!

2026-08-19 15:15:38
news-image

உன்னிச்சை – வவுணத்தீவு அபிவிருத்திக்கு காணி...

2026-08-19 15:14:55
news-image

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை:...

2026-08-19 14:54:37
news-image

நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளில் குறைபாடுகள் ;...

2026-08-19 14:42:34