17 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான பிபா உலகக் கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொடர் இந்­தி ­யாவில் இன்று தொடங்­கு­கி­றது. 

முதன்முறை­யாக இந்­தி­யா வில் நடை­பெறும் இந்த கால்­பந்து திரு­விழா எதிர்­வரும் 28ஆம் திகதி வரை கொல்­கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, குஹாத்தி, மர்­கோவா ஆகிய 6 நக­ரங்­களில் நடை­பெ­று­கின்­றது.

கால்­பந்து வர­லாற்றில் பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரி­வுக்­கான உலகக் கிண்­ணத்­திலும் இந்­தியா கள­மி­றங்­கு­வது இதுவே முதன்­முறை. 

போட்­டியை நடத்தும் நாடான இந்­தி­யா­வுடன், ஈரான், அமெ­ரிக்கா உட்­பட 24 அணிகள் கலந்து கொள்­கின்­றன. இவை 6 பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. ஒவ்­வொரு பிரி­விலும் 4 அணிகள் இடம்­பெற்­றுள்­ளன. இந்­தியா, அமெ­ரிக்கா, கொலம்­பியா, கானா ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்­பெற்­றுள்­ளன.

தொடக்க நாளான இன்று டெல்­லியில் நடை­பெறும்ஆட்­டத்தில் கொலம்­பியா - கானா ஆகிய அணிகள் மோது­கின்­றன. இதே நேரத்தில் மும்­பையில் நடை­பெறும் ஆட்­டத்தில் நியூ­ஸி­லாந்து, துருக்­கியை சந்­திக்­கி­றது. இந்­தியா தனது முதல் போட்­டியில் அமெ­ரிக்­காவை எதிர்கொள்கிறது. பராகுவே –- மாலி ஆகிய அணிகள் மோதும் போட்டியும் இன்று நடைபெறவுள்ளது.