சிறுநீர் கசிவு பாதிப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆர்ட்டிஃபிசியல் யூரினரி ஸ்பிங்க்டர் எனப்படும் நவீன மருத்துவ சாதனம் பொருத்தப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
ஆண்களின் சிலருக்கு புராஸ்டேட் எனப்படும் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது சிலருக்கு அழுத்தம் காரணமாக சிறுநீர் கசிவு பாதிப்பு உண்டாகிறது. சில பெண்களுக்கு வேறு சில காரணங்களால் சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் ஆர்ட்டிஃபிசியல் யூரினரி ஸ்பிங்க்டர் எனப்படும் சாதனத்தை உங்களது சிறுநீரக பகுதியில் பொருத்தி, நிவாரண சிகிச்சையை வழங்குவர்.
கட்டுப்படுத்த இயலாத சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு பலூன் போன்ற காற்றடைக்கப்பட்ட வைத்திய சாதனம் தான் ஆர்ட்டிஃபிசியல் யூரினரி ஸ்பிங்க்டர். இந்த சாதனத்தை வைத்தியர்கள் சிறுநீர்க் குழாயை சுற்றி பொருத்துவர்.
சிரிப்பு- தும்மல்- இருமல்- நடைப்பயிற்சி- உடற்பயிற்சி - ஆகிய நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சிலருக்கு கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு சிறுநீர் கசிவு பாதிப்பு ஏற்படும். இத்தகைய தருணங்களில் இந்த கருவியை இயக்குவதன் மூலம் சிறுநீர் கசிவு தடுக்கப்பட்டு, நீங்கள் விரும்பிய தருணத்தில் சிறுநீரை வெளியேற்றலாம். மேலும் இத்தகைய கருவியின் செயல்பாடு நோயாளியின் உடல் நிலையை பொறுத்து ஒரு தசாப்தங்கள் வரை செயல்படும். அத்துடன் இது தொடர்பாக சிறுநீரகவியல் நிபுணர்களின் பரிந்துரையை உறுதியாக பின்பற்ற வேண்டும். இத்தகைய நவீன கருவியை பொருத்திக் கொண்ட பின் கட்டுப்படுத்த இயலாத சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு 90 சதவீதம் நிவாரணம் கிடைக்கிறது என பயனாளிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சத்திர சிகிச்சை இரண்டு மணி தியாலங்கள் முதல் ஐந்து மணி தியாலங்கள் வரை நடைபெறும். சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால் பக்க விளைவு பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
வைத்தியர் ஷாகீர் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM